மாவனல்லை கிரமினிய பள்ளிவாசல் சட்டரீதியானது – நீதிமன்றம்

மாவனல்லை கிரமினிய பள்ளிவாசலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி நீதவானினால் நேற்று முன்தினம் (15) தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த பொதுபலசேனா அமைப்பின் பிரதிநிதியான தேரரொருவர் மாவனல்லை கிரமினிய பள்ளிவாசலுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த பள்ளிவாசல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்தே அவர் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டிருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் மாவனல்லை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைகள் நேற்று மாவனெல்ல நீதிதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் இதன்போது முறைப்பாட்டாளரான தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அத்துடன் இந்த பள்ளிவாசல் கட்டிடம் சட்டரீதியானது எனவும் இதனால் பிரதேச அமைதிக்கு எந்த தீங்குமில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கினை மாவனெல்ல நீதவான் தள்ளுபடி செய்தமை குறிப்பிட்டத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares