மாவனல்லை – கொழும்பு பஸ் வேண் ஒன்றுடன் மோதுண்டு மூவர் பலி

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கலிகமுவ பலபன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனொன்றும் மாவனல்லை கொழும்பு பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே விபத்து இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த விபத்தில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட 10 பேரில் மூவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

136268_1 136268_5 photo_68065 photo_374754

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *