மாவனல்லை, சமூக பொறுப்புக்கு சவால் விடும் டெங்கு நுளம்புகள்

இன்று முஸ்லிம்கள் அதிகம் வாழும் முக்கிய நகரங்கள் ஒரு பாரிய சவாலுக்கு உட்பட்டு இருப்பதனை நாட்டில் உள்ள வைத்திய சாலை தரவுகள் தெளிவாக காட்டு கின்றன.

நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரேதேசங்கலான மாவனல்லை, கிண்ணியா, அக்குரணை கம்பளை, காத்தான்குடி, கல்முனை, அக்கரைப்பற்று மேலும் கொழும்பு நகரில் மாளிகாவத்தை மற்றும் மருதானை மற்றும் ஏனையே முஸ்லிம் கிராமங்கள் டெங்கு நுளம்பின் தாகத்தின் சவாலுக்கு உட்பட்டு இருப்பது முஸ்லிம்களின் சமூக பொறுப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத் துவாதகவே அமைந்துள்ளது.

எனவே ஒவ்வொரு முஸ்லிம் சமூக அங்கத்தவர்களும் தமது வீடு சுற்று சூழல் மற்றும் அலுவலகம், பாடசாலைகள், மைதானங்கள், பள்ளிவாசல்கள் ஆகிவற்றை சுத்தமாக வைத்து இருப்பதுடன்டெங்கு நுளம்பு உருவாகுவதை தடுக்கும் விதமாகவும் செயற்படுவது முக்கி சமூக பொறுப்பாகும்

டெங்கு தொடர் பான பொதுவான பார்வை

மழைக்கால மாதங்களில் இலங்கை மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு. ‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்தக் காய்ச்சல் வருகிறது. இவற்றைச் சுமந்து திரியும் ‘ஏடிஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனும் நுளம்பு நம்மைக் கடிக்கும்போது கிருமிகள் பரவி, நோய் உண்டாகிறது.

அறிகுறிகள்

கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கே உரிய அறிகுறிகள். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.

ஆபத்து எப்போது?

பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

பொதுவாக இந்தக் காய்ச்சல் முதல்முறையாக வரும்போது ஆபத்து வராது; இரண்டாம் முறையாக வரும்போதுதான் ஆபத்து வரும். கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் ஆபத்து விரைவில் வந்துசேரும்.

என்ன சிகிச்சை?

டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *