மாவனல்லை சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட நாசகார செயலா? கபீர் ஹாசிம்

மாவனல்லையில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வெசக் தினங்களில் நடைபெற்றிருப்பது கவலைக்குரிய விடயம் என கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் மாவனல்லை நியூஸ் இற்கு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
மாவனல்லையை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சம்பவத்தை கேள்விப்பட்டவுடனே நான் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கடை உரிமையாளரை சந்தித்து, சம்பவம் தொடர்பில் விசாரித்தேன்.

கடைக்கு பின் புறமாக உள்ள கதவை உடைத்துக்கொண்டு கடைக்குள் வந்து இந்த நாசகார செயலை செய்துள்ளதாக பொலிசாரின் முதற் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அதேநேரம் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதா எனவும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ரனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடியவில்லை என்பதால் யாருக்கும் கைநீட்ட முடியாது.

என்றாலும் கடந்த வாரம் அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கடை தீயிட்டு நாசப்படுத்தப்படிருந்தது. அந்த சம்பவம் நடைபெற்று ஒரு கிழமையில் மாவனல்லையிளும் அதேபோன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதை ஒப்பிட்டுப் பாருக்கும் போது, மாவனல்லை சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட நாசகார செயலா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சாதாரண விசாரணை ஒன்றை நடாத்தி, சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுமா? என்ற சந்தேகம் அரசாங்கத்தின் மீது எழுகின்றது. அதற்கு சிறந்த உதாரணம் அளுத்கம சம்பவம்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு (SSP) நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்றதிற்கு அறிக்கை ஒன்றையும் சமர்பிக்கவுள்ளேன்.

இதேநேரம் குறித்த கடை தீ பற்றுவதை மாவனல்லை பிரதேச சபையிற்கு அறிவித்ததும், அவர்கள் ஒவ்வொரு காரணம் சொல்லி குறித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனத்தை அனுப்பவில்லை. இதனால் கடை முழுமையாக தீக்கிரை ஆகும் வரை தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

மாவனல்லையை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ர உறுப்பினர் என்ற வகையில் இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தேன்.

Kabir_Hashim_LeN_30.06.101

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *