மாவனல்லை சாஹிரா கல்லூரியிலிருந்து 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு

 

5895731209_040f69e2a7

அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியிலிருந்து 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் ஜவாட் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானப் பிரிவில் 15 மாணவர்களும், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவில் 14 மாணவர்களும், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவில் (ஆங்கில மொழிமூலம்) 2 மாணவர்களும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் தனது பராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டைக் கொண்டாட இருக்கும் மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரி கல்வித் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares