மாவனல்லை தீ விபத்து தொடர்பில் அறிக்கை ஒன்றை பாராளுமன்றதிற்கு சமர்பிக்கவும் – ரணில்

மாவனல்லையில் அண்மையில் வர்த்தக நிலையமொன்று தீ விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் முழுமையான பொலிஸ் அறிக்கை ஒன்றை அடுத்த பாராளுமன்ற வாரத்தில் சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த (23) வெள்ளிகிழமை பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான நேரத்தின் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மாவனல்லையில் வர்த்தக நிலையம் ஒன்று தீ விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் அடுத்த பாராளுமன்ற வாரத்தில் முழுமையான பொலிஸ் அறிக்கை ஒன்றை சபைக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமரிடம் ரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் சம்பவம் இடம்பெற்ற போது மாவனல்லை தீயடைப்பு படையினர் ஏன் வரவில்லை என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.அதுமட்டும் அல்லது குறித்த வர்த்தக நிலையதிற்குள் பலவந்தமாக புகுந்தே தீவைக்கப்பட்டதாகவும் தெரிவிட்கப்படுகின்றது. பொலிசாரும் அதை ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் இதுவரை யார் என்பதுதான் தெரியாதுள்ளது என்று தெரிவித்தார்.

RWTC116

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares