மாவனல்லை தீ விபத்து மின் கசிவு காரணமாகவா? விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா? (video இணைப்பு )

வர்த்தக நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாவனல்லை பூட் சிட்டிக்கு முன் உள்ள கடை ஒன்றில் (hardware) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மானனல்லை நகரின் கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள றீகல் வர்த்தக நிலையத்திலேயே தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் அந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமாகி உள்ளது.

பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினரின் உதவியுடன் இந்த தீயை கட்டுப்பாட்டிட்கு கொண்டுவந்தனர். இதேவேளை தீயணைப்பு படையினர் கண்டியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

உடனடியாக மாவனல்லை தீயணைப்பு வாகனம் வந்திருந்தால் இதனை அணைத்திருக்கலாம் எனக் கடை உரிமையாளர் குறிப்பிட்டார். அவர் கடைக்கு அதிகாலையில் விடயம் கேள்விப்பட்டவுடன் வந்துள்ளார் அந்நேரம் தீயானது அணைக்கக் கூடிய விதத்திலேயே இருந்ததாம். பல தடவைகள் மாவனல்லையில் தீப்பற்றியபோதெல்லாம் பிற இடங்களிலிருந்து வந்த தீயணைப்புப்படையினரே தீயை அணைத்துள்ளனர்.
மாவனல்லை பிரதேச சபையிலும் ஒரு தீயணைப்பு வாகனம் உள்ளது? ஏன் எதற்கு என அங்கிருந்த பலரும் அங்கலாய்த்தனர்.

இது மின்ஒழுக்கினால் ஏற்பட்ட சேதமல்ல என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது திட்டமிட்ட சதி:

(1) பின்புறத்திலுள்ள சுவரிலுள்ள நான்கு புலொக் கற்கள் கழற்றி அருகில் வைக்கப்பட்டுள்ளன. அதில் சிறிதளவேனும் புகை பட்டிருக்கவில்லை

(2) பின்புறத்தில் உள்ள ஸ்டோர் கதவு ஒருபகுதி வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்படடதா? அல்லது அல்லது விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட, பல்வேறு கோணங்களில் மாவனல்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

video- Daily Ceylon

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *