மாவனல்லை தொடர்பாக பேசியதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி – கபீர் ஹாசிம்

அளுத்கமயில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு அரசுக்கு சாமரை வீசும் முஸ்லிம் உறுப்பினர்கள் அளுத்கம பேருவளை பதுளை போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து மௌனம் சாதித்த வேளை எமது கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றினை சமர்ப்பித்து உரையாற்றியது மாத்திரமன்றி மாவனல்லயில் பொதுபலசேனாவினால் நடத்தப்பட்ட கூட்டம் குறித்தும் பிரஸ்தாபித்திருந்தார். இது முஸ்லிம்களுக்கு கொடுக்கும் மரியாதையாகும். எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இனவெறியர்களால் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தாக்கப்படுவது எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாத செயலாகும். இதற்கான முழுப்பொறுப்பினையும் அரசு ஏற்க வேண்டும் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *