மாவனல்லை நகரில் இன்று பொதுபல சேனாவின் உண்ணாவிரதப்ப் போராட்டம்

மாவனல்லை நகரில் இன்று (17) மாலை கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பினர் உண்ணா விரதப்ப் போராட்டம் ஒன்றையூம் கூட்டம் ஒன்றையும் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு மாவனல்லை மணிக்கூண்டிட்க்கு அருகில் நடைபெறவுள்ளது. இவர்கள் இந்த எனவே முஸ்லிம்கள் கூட்டதை நடத்துவது முஸ்லிம்களை வேண்டுமென்றே வலிச்சண்டைக்கு இழுப்பதட்காகவே எனவே முஸ்லிம்கள் இந்த கூட்டதை பார்பதற்கு செல்லவேண்டாம் என்றும் எது நடந்தாலும் முஸ்லிம்கள் மிகப் பொறுமையுடன் நடந்து கொள்ளும்படியும் மிகவும் பணிவுடன் வேண்டிகொள்கிறோம்.

மேலும் உங்களுக்கு அருகில் உள்ள பள்ளிவாயல்களையோ தக்கியாக்களையோ அணுகி பாதுகாப்பு நடவக்கைகளை மேட்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். இரவு நேரங்களில் முச்சக்கரவண்டி ஓடுவதையும், பாதைகளில் நடமாடுவதையூம் தவிர்த்துகொள்ளவும்.

பொய்யான தவறான செய்திகளை நம்பவேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறோம். நேற்று இரவு மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனத்துடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட பல முடிவுகளில் ஒன்று தான் பொது மக்களுக்கு உண்மையான உருதிப்படுதப்ட்ட செய்திகளை வழங்க வேண்டும் என்பது.

அந்த வகையில் மாவனல்லை தொடர்பான செய்திகளை, மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனத்துடன் இணைந்து உண்மையானதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வழங்க மாவனல்லை நியூஸ் குழுவினர் தயாரகியூள்ளனர்.

அதாவது மாவனல்லை நகரில் அல்லது அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதாவது சம்பவங்கள் நடைபெற்றால் மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனம் உறுதிப்படுத்திய பின்னரே மாவனல்லை நியூஸ் குழுவினர் செய்திகளை வெளியிடும்.

உடனுக்குடன் இருபத்திநான்கு மணிநேரமும் மாவனல்லை தொடர்பான உண்மையான செய்திகளை வழங்க மாவனல்லை நியூஸ் குழுவினர் தயாராகவுள்ளனர்.

எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக…….

31919008

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *