மாவனல்லை பிரதேச சபைக்காக ஐந்து கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் (PHOTOS)

வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளன. கடந்த 18ம் திகதி இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று கேகாலை மாவட்ட செயலகத்தில் விஷேட பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாவனல்லை பிரதேச சபைக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் பல இன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுண, தேசிய மக்கள் முன்னனி ஆகியன அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேற்சைக் குழுக்களும் இன்று கேகாலை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares