மாவனல்லை பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (19) நிறைவேற்றம்

2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முதலாவது வாசிப்பு இன்று மாவனல்லை பிரதேச சபையில் இடம்பெற்றது . இதன் போது சபையில் ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது.

உள்ளுராட்சி மன்றங்களில் வரவு செலவு திட்டம் தோல்வியடையும் வகையில் வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பதாக கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்ததாலும், பிரதேச சபை உப தலைவர் அவர்களின் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டிருந்த அறையை பிரதேச சபை தலைவரினால் ஒய்வு அறையாக மாற்றி இருந்தார், இன்று மிண்டும் உப தலைவருக்கு அந்த அறை வழங்கப்பட்டதாளும் தான் இன்று வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றது என மாவனல்லை பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோசம் இட்டனர்.

இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்த வரவு செலவு திட்டம் தோல்வி அடையும் என பலரும் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.

New Picture (14)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares