மாவனல்லை பிரதேச சபையின் முன்னால் தலைவர் பி. பி விக்ரமசிங்க மைத்திரிபாலவிற்கு ஆதரவு

கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி பொலன்னறுவையில் நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்தில் மாவனல்லை பிரதேச சபையின் முன்னால் தலைவர் பி. பி விக்ரமசிங்க (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) அவர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பி. பி விக்ரமசிங்க அவர்கள் மாவனல்லை நியூஸ்க்கு கருத்து தெரிவிக்கையில்:

40 வருட காலத்திற்கும் மேலாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவராகவும், 1997 ம் ஆண்டு முதல் மாவனல்லை பிரதேச சபையின் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்துள்ளார்.fds-1417589882258

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய எனக்கு சப்ரகமுவ மாகாண சபையின் முக்கிய அமைச்சர் ஒருவரினால் செய்யப்பட அநியாயங்களினால் நான் மிக மனம் உடைந்து போயுள்ளேன்.இதன் காரணத்தினால் மிகவும் கவலையுடன் தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக தெரிவித்தார்.

தான் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினாளும் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராக செயட்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.
fds

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *