மாவனல்லை பிரதேச சபை உப தலைவர்ரின் அறை ஒய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளது

மாவனல்லை பிரதேச சபை உப தலைவர் M.S.M Kamil அவர்களின் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டிருந்த அறையை பிரதேச சபை தலைவர் ஒய்வு அறையாக மாற்றியுள்ளர். உப தலைவர் உத்தியோகபூர்வ அறையில் இருந்த பொருட்களை இடம் மாற்றும் போது அவ் அறையில் இருந்த 165000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக உப தலைவர் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்னர் பிரதேச சபை ஊழியர்கள் மூவரை பொலிஸ்சார் நேற்று கைதுசெய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை மாவனல்லை பிரதேச சபையிற்கு முன்னால் பிரதேச சபை ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது இதேவேலை கைதுசெய்யப்பட்டிருந்த மூவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

You may also like...

1 Response

  1. பாஸ்லின் says:

    நல்லா இருக்கு, மாவனல்லை நல்லா வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares