மாவனல்லை பிரதேச சபை புதிய தலைவராக அனுர சந்தன தெரிவு

மாவனல்லை பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் அனுர சந்தன வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வாக்கெடுப்பு இன்று மாவனல்லை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அனுர சந்தனவு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கே.ஜி பியதிஸ்ஸவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக எம்.எஸ்.எம் காமில் ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டன.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அனுர சந்தன 21 வாக்குகளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கே.ஜி பியதிஸ்ஸ 16 வாக்குகளும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக எம்.எஸ்.எம் காமில் 02 வாக்குகளும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை பிரதி தலைவராக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் சந்ர சிறி மற்றும் மொஹமட் ஆசாம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதில் சந்ர சிறி 21 வாக்குகளும் மொஹமட் ஆசாம் 18 வாக்குகளும் பெற்றுக்கொண்டனர்.

இதவேளை, மான் சின்னத்தில் போட்டியிட்ட சுயற்சைக் குழு தலைவர் நபீர் கான் தான் பிரதேச சபையில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காது சுயாதீனமாக செயற்படப்போவதாக அறிவித்திருந்தார். எனினும் இன்று ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக தனது வாக்குகளை வழங்கியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தமக்குக் கிடைத்த ஒரு போனஸ் ஆசனத்துக்கு ஜயந்த குமாரவை தெரிவு செய்திருந்ததுடன், கட்சித் தீர்மானத்துக்கு அமைய அவர் இன்று சுயாதீனமாகவே செயற்பட்டார்.

தேசிய மக்கள் கட்சி தமக்கு கிடைத்துள்ள ஒரு போனஸ் ஆசனத்துக்கு ருவன் குமார தயாரத்ன என்பவரை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தேர்தலுக்கு முன்னிறுத்திய வேட்பாளர்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் தமது கட்சிக்கு எதிராக ஐ.தே.க. ஆதரவாளர்கள் சிலரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக் கொள்வதற்காக வேண்டியும் ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் மாவனல்லை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 16 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 16 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் 05 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 01 உறுப்பினர் தேசிய மக்கள் கட்சி சார்பில் 01 உறுப்பினறும் மான் சின்னத்தில் போட்டியிட்ட சுயற்சைக் குழு 01 உறுப்பினரையும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *