மாவனல்லை பொதுமக்களால் தாக்கப்பட கடவத்தை பொலீஸ் O.I.C. வைத்தியசாலையில்

பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் பொறுப்பற்ற செயல் காரணமாக கொதித்தெழுந்த மாவனல்லை மக்கள் அவரை அடித்து தாக்கியுள்ளனர்.
மாவனல்லையில் கடந்த 26ம் திகதி இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கடவத்தை பொலிஸ் நிலையத்தின் சூழல்பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடவத்தை பொலிஸ் நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விஜேரத்தின பயணித்த டபள் கெப் வாகனம், மாவனல்லையில் ஆட்டோ ஒன்றின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர். பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் அதிவேகத்தில் பயணித்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது தனது தவறை ஏற்றுக்கொள்ளாத பொலிஸ் அதிகாரி, மேலும் தான் பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி என்று பொதுமக்களை அச்சுறுத்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து கோபம் கொண்ட பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளனர். அவரது வாகனமும் பொது மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *