மாவனல்லை பொலிசார் இருவர் மீது எசிட் தாக்குதல் (விடியோ இணைப்பு)

மாவனெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது அசீட் தாக்குதலுக்கு உள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது, இன்று அதிகாலை 5.20 மணி அளவில் இனந்தெரியாத சிலரால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கேகாலை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று பகல் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் கண்களில் பாரிய எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கண் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் மாவனல்லை நகரில் ஏற்பாடுசெய்யபாட்டு இருந்த கடும்போக்கு அமைப்புகளின் கூட்டங்களுக்கு தடை உத்தரவு வழங்கியதற்கு பலிவாங்கும் செயலாகும் என நம்மபப்டுகின்றது.

Video – Hiru News

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares