மாவனல்லை மக்களின் பங்காளி மாவனல்லை நியூஸ்

 

10K-Likes

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடைய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

2013 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் டுவிட்டர் வலைப்பின்னல் மூலமாக மாவனல்லை மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் நாம் எம் சேவையை தொடரும் ஒரு முயற்சியாக மாவனல்லை நியூஸ் இணையத்தளத்தினுடாகவும் செய்திகளை வழங்க ஆரம்பித்தோம்.

தொடர்து முன்று (3) வருடங்களாக மாவனல்லை மக்களோடு மக்களாக கலந்து எமது பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்…..

மாவனல்லை குறித்த செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் அதனுடன் இணைந்த விவகாரங்களையும் உலகிற்கு எடுத்தியம்பவும் வளர்ந்து வரும் ஊடகத்துறை சார் இளம் சமுதாயத்தினரின் திறமைகளை வெளிபடுத்த ஒரு தளமாகவும் செயற்படுவதே எமது நோக்கமாகும்.

சமூக நலனை முற்படுத்தி உள்ளூர் அரசியல் மற்றும் இயக்க செயற்பாடுகளுள் சிக்காது நடுநிலையாகவும் தெளிவாகவும் செய்திகளை வழங்குவது எமது கடமையாகும்.

சமூக நலனை மட்டுமே முதன்மைப்படுத்தி நாம் செயற்படும்போது ஏற்படும் சுமைகளை சுமக்கவும், சத்தியத்தின் வழிநின்று, உண்மையாகவும், நேர்மையாகவும், துணிவாகவும் செயற்படுவதுடன், எந்தவித சலசலப்போ, அல்லது அச்சுறுத்தல்களோ எமது பயணத்தை கட்டிப்போடாது என்பதையும் எமது உறவுகளுக்கு கூறிக்கொள விரும்புகின்றோம் .

இன்ஷா அல்லாஹ்எம்மால் முயன்ற சமூக சேவைகளை நேர்மையாக முன்னெடுப்போம். தேவையான நேரங்களில் வழிகாட்டுதல்களையும் வழங்கும்.மேன்மேலும் எமது இந்த முயற்சிக்கு தங்களது ஆதரவினை துஆவையும் நாம் உங்களிடமிருந்து எதிர்பார்கின்றோம். யா அல்லாஹ் எமது நேர்மையான நோக்கத்தை ஏற்றுக்கொள்வாயாக.

நன்றி..!

-நிர்வாகம்-

Post

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares