மாவனல்லை முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத மே மாதம்

பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி கோருவோம். அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் திட்டமிட்ட இனவாத போக்கினால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளை அல்லாஹ்விடம் முறையிடுவோம்.

எம்மைப் படைத்து பரிபாலிக்கும் வல்ல ரப்பிடம் கையேந்தி மன்றாடி எமது சமூகத்தின் மீதான நெருக்கீடுகளை தனித்து எம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் பாதுகாக்க அருள்புரிய வேண்டுவோம்.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை குறிவைத்து ஏற்படுத்தப்படும் தீ விபத்தானது அளுத்கமையில் இருந்து மாவனல்லைக்கு தாவியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தகங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன.

download

மாவனல்லை என்றாலே முஸ்லிம்களுக்கு மறக்காத அளவுக்கு அழிவுகளை ஏற்படுத்திய ஆறாத காயங்களே நினைவில் நிற்கின்றன.

(1) கடந்த 2014.05.18 அதிகாலை மாவனல்லை முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.

(2) சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் 2001.05.02 மாவனல்லையில் துவங்கி முழு நாட்டையும் உலுக்கிய பாரிய சிங்கள – முஸ்லிம் கலவரம்.

கொழும்பு – கண்டி வீதியில் அமைந்துள்ள மாவனல்லை பூட்சிட்டிக்கு முன்னால் உள்ள ஹாட்வெயார் கடையொன்று கடந்த 2014.05.18 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

குறித்த நேரத்தில் வெளியூர் செல்ல பஸ்நிலையம் வந்த ஒருவர் ரீகல் ஹாட்வெயார் எரிவது கண்டு அதன் உரிமையாளரான (உயன்வத்த) மஹ்ரூமிடம் தெரியப்படுத்தினார்.

செய்தியை கேள்வியுற்று ஸ்தளத்திற்கு விரைந்த மஹ்ரூம் தனது கடை எரிவது கண்டு பதறிப்போனார். தீயை அனைக்கும் முயற்சியில் உடனடியான மாவனல்லை பிரதேச சபை தீயணைப்பு பிரிவிடம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். அவர்கள், தம்மிடமுள்ள தீயணைப்பு இயந்திரங்கள் பழுதடைந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

அவ்விடத்திற்கு வந்த பொலிசாரின் உதவியுடன் கண்டி தீயணைப்பு பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீப்பற்றிக் கொண்டிருந்த வேளையில் மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு சேவையில் இருந்திருந்தால் தனது சொத்துக்களை காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும் என அதன் உரிமையாளர் கூறுகிறார்.

கண்டியிலிருந்து தீயணைப்புப் பிரிவினர் வந்து சேரும் வேளை உடமைகள் அனைத்தையும் தீ எப்பமிட்டுவிட்டதென்றே சொல்லலாம் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக தீயினால் அழிந்துவிட்டது. இத்தீயானது மின் ஒழுக்கினால் ஏற்பட்டதொன்றல்ல என சொல்லப்படுகின்றது.

அவ்வாறு உறுதியாக சொல்லப்படுவதற்கு

(1) பின்புரத்திலுள்ள நான்கு புலொக் கற்கள் கழற்றப்பட்டு அருகில் வைக்கப்பட்டுள்ளன என்றும், அக்கற்களில் சிறிதளவேனும் நெருப்புப் பட்ட புகை காணப்படவில்லை..

(2) பின்புறத்திலுள்ள களஞ்சிய அறையின் கதவில் ஒரு பகுதி வெட்டி அகற்றி எடுக்கப்பட்டுள்ளது.

போன்ற இரு காரணிகளையும் வைத்து மாவனல்லை பொலிசார் விசாரனையை துரிதமாக மேற்கொண்டு இத்தீவிபத்துக்கான காரணியையும் அதன் சூத்திரதாரிகளையும் கண்டுபிடித்துவிடுவார்கள் என பொலிசாரை நம்புவது மக்களின் விருப்பமே.

மாவனல்லையில் முஸ்லிம் கடை தீப்பற்றிக் கொண்டது என்ற செய்திகள் நாடு பூராகவும் பரவிய சந்தர்ப்பத்தில் அதன் தாக்கத்தை அனுபவித்து உணர்ந்த மாவனல்லை முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொண்டார்கள்.

கடை உரிமையாளர் மஹ்ரூமிற்கும் ஏனைய வர்த்தகர்களுக்கும் இடையில் தகராருகளோ முரண்பாடுகளோ இருந்ததாக எவரும் தெரிவிக்க வில்லை. இருந்தும் சில கதைகள் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தன.

அதாவது, மாவனல்லை நகரில் மீண்டும் முஸ்லிம்களின் ஆதிக்கம் வர்த்தக ரீதியாக அதிகரித்து வருவதாக அண்மையில் மாவனல்லை நகரில் பொதுபலசேனா அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தெரிவித்தார்கள் எனவும், மவனல்லை நகரில் முஸ்லிம் வர்த்தகர்களை மிரட்டி கப்பம் பெறுவதாகவும் கூறப்பட்டது.

அதே வேளை சிங்கள மத அனுஷ்டான நிகழ்வுகளுக்கும் முஸ்லிம் வர்த்தகர்கள் நிதியுதவி செய்து சகவாழ்வு வாழ்ந்து வருவதாகவும் பேசப்படுகின்றது.

முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹைவே கொம்ப்லெக்ஸ் பில்டிங்கில் அமைந்துள்ள ரீகல் ஹாட்வெயார் தீ வைத்துவிட்டு இலகுவாக தப்பிச் செல்லக்கூடிய இடமொன்றில் அமைந்துள்ளது எனவும் கருதப்படுகின்றது.

ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் சில இனவாதிகள் மாவனல்லை நகரில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர் என மாவனல்லைநியூஸ்.கொம் இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த வேளையில் ரீகல் ஹாட்வெயர் எரியுண்டிருக்கின்றது.

நாட்டில் சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஆங்காங்கே ஏற்படுத்தி நாட்டின் அமைதியை சீர்குழைத்து முஸ்லிம்களின் வர்த்தகம் மற்றும் மார்க்கம் ஆகியவற்றிற்கு எதிராக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் இறைவனிம் உதவிகோருபவர்களாக இருப்போம். பொறுப்பிலுள்ளவர்கள் மிகவும் பொறுப்பாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2014.05.16 மாவனல்லை முபாரிஸ் கேட்போர்கூடத்தில் முஸ்லிம் அமைப்பொன்றினால் பிரதேச அதிதிகளுக்காக “நற்செய்தி பெற்று நல்வாழ்வு வாழ்” எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கினைக்கூட சிங்கள இனவாத அமைப்புக்கள் பிழையான கண்ணோட்த்தில் பார்த்திடக் கூடும்.

எமது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்புக்களும் நாட்டில் முஸ்லிம்களின் இருப்பு, அவர்களுக்கு ஏற்படும் சோதனைகள் என்பவற்றை உணர்ந்து இன்றைய அசாதார சூழலில் மார்க்க சம்பந்தமான பிரச்சாரங்களில் மத உணர்வுகளைத் தூண்டாத வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ளுவார்கள் என நம்புகின்றேன்.
மே மாதம் இலங்கை வரலாற்றிலே பல மறக்க முடியாத அழிவுகளையும் வடுக்களையும் கொடுத்துள்ளது. அவற்றுள் நினைவில் நின்ற சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்.

-ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்-

aaaaa (1)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares