மாவனல்லை முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால்…..

சனிக்கிழமை (22) மாவனல்லை நகரில் நடைபெற்ற பௌத்த இனவாத அமைப்பான பொதுபல சேனாவின் கூட்டத்தில், “நாங்கள் மாவனல்லையில் இருந்து போகும் பொழுது ஹஸன் மாவத்தையின் பெயரை அனாகரிக தர்மபால மாவத்தையென மாற்றிவிட்டுதான் போவோம்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டம் முடிந்து அங்கிருந்த சில இனவாதிகள் சும்மார் 50-60 பேருடன் ஹஸன் மாவத்தைக்கு வந்து ஹஸன் மாவத்தை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அனாகரிக தர்மபால மாவத்தையென பலாத்காரமான முறையில் சட்டவிரோதமாக மாற்றினர்.

இதன் போது அந்த இடத்தில்லிருந்த பொலிஸ் அதிகாரிகள் அதனை தடுக்க முயற்ச்சி செய்யவில்லை என முஸ்லிம்கள் அனைவரும் கவலைப்பட்டனர். அதற்கு காரணம் இருக்கின்றது. எனினும் பொலிசார் அந்த இனவாதிகளை தடுக்க முற்பட்டிருந்தால் பொலீசாருக்கும் அந்த இனவாதிகளுக்கும் இடையில் வாக்குவாதமாக ஆரம்பித்து மோதலில் முடிந்திருக்கும். அவர்களின் நோக்கமும் அவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கி பின்ன‌ர் முஸ்லிம்களால் நடக்கும் சிறு தவறுகளை பெரிதுபடுத்தி காட்டுவதாகும். எனவே பொலிஸ் அதிகாரிகள் அந்த நேரத்தில் மிக பொறுப்புடன் நடந்து கொண்டனர்.

இதேவேளை இனவாதிகள் வேண்டும் என்றே முஸ்லிம்களுடன் இதற்கு முன்னர் 2001ம் ஆண்டு மாவனல்லையில் நடந்த இனக்கலவரத்தினை மீண்டும் ஏற்படுத்தவே தான் ஹஸன் மாவத்தையின் பெயரை மாற்றினார்கள். இதன்போது இந்த இடத்தில கூடியிருந்த முஸ்லிம்களும் பொறுமையுடனும் மிகவும் புத்தியுடனும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையால் நடைபெற இருந்த பாரிய ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டோம்.

எனினும் முஸ்லிம் சமூகம் நடைபெரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நடந்து முடிந்த பின்னர் புலனாய்வு செய்வதும் பின்னர் கூட்டம் கூடுவதும், அனல் பரக்க கதை சொல்வதையும் விடுத்து தூர நோக்கோடு அசம்பாவிதங்கள் ந‌டைபெற முன்னரே

1. சமூக நல்லிண்க்கத்துக்கான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்ச்சி எடுக்க வேண்டும்.
2 எமது சமூகதிதின் மீது ஏற்படுத்தப்பட்டடுள்ள காழ்ப்புனர்வைக் களைவதற்கும் ஒன்று பட்டு திட்டமிட்டு          செயற்பட வேண்டும்.

இதுவே உண்மையான‌ புத்திசாலித்தனமும் காலத்தின் தேவையுமாகும்.

bodu bala sena mavanella-බොදු බල සේනා මාවනැල්ල බොදු සමළුව (10)

You may also like...

4 Responses

 1. ஹக் says:

  இந்த புத்திசாலித்தனம், விவேகம் எல்லாம் சிங்களவனைக் கண்டால் மட்டும்தான்.

  தவ்ஹீத் ஜமாஅத் ஜும்மா நடாத்தி இருந்தால், பார்க்க இருந்திச்சு ஜமாத்தே இஸ்லாமியின் வீரத்தை.

  • Moh. says:

   correct bro

  • mohamed says:

   மாவனல்லை முஸ்லிம்கள் கோழைகள். அவன் பெயர் மாத்துரத்தை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான்கள். அல்லாஹ்வு;க்கும் றஸூலுக்கும் மட்டும்பயந்து ரோட்டுக்கு இரங்கி இருக்க வேண்டும். இவன்கள் என்னமோ தலயால வேலை செஞ்சானுகளாலம். மார்க்கத்துல உட்டுக் கொடுக்க ஏலா. சேப்பண்னிக்கொண்டு போகேலா. நபி சொன்னாங்க நாங்க செய்வோம். புத்திசாலித்தனம் விவேகத்தை உட்டுட்டு அண்டக்கி ரோட்டுக்கு இறங்கி இருந்தா ஒரு கை பார்க்கஇருந்திச்சி. உலகமே மாவனல்லையைப் பததி பேசி இருக்கும். முபாரிஸ் எரிஞசி சாப்பலாகி இருக்கும். 2002 ஆம் ஆண்ட விட ரெகோர்ட் வெச்சி இருந்திச்சி. ஹசன் பில்டிங் எல்லாம் புகை கக்கிக் கொண்டு ஒரு கிழமைக்கு இருந்திருக்கும் . பலசேளாவும் தங்கட நோக்கம் நிறைவேறின சந்தோசத்துல அக்குரணையை டாகட் பண்ணுவாகுகள். மடையன்கள் தலையப்பாவிச்சானுகளாம் தலைய. ஒரு கை பார்த்திருந்தா தானே எங்களுக்கும் கொழும்பிலிருந்து கொண்டு வெப்சைடடுல கொஞசம் கிழிச்ச இருந்திச்சுp மடையன்கள் இல்லாமலாக்கி விட்டானுகளே பாவிகள்

 2. Moh. says:

  izuwe egada muslim amayziyana othara iruntha .. alla chandi maarum pottu veluthipanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares