மாவனல்லை மஸ்ஜித் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பரிசில் வழங்கும் நிகழ்வு

மாவனல்லை மஸ்ஜித் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற உஸ்ஸாபிடிய சுமங்கல கனிஷ்ட வித்தியாலயத்தின் செல்வி. லக்ஷானி விஜயசிங்க மற்றும் சித்தி பெற்ற  20 மாணவர்கள் பரிசில்களும், சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 அத்தோடு, பரீட்சையில் பங்கு பற்றிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் (125 பேர்) ஆர்வமூட்டும் நோக்கோடு பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் அதிபர் உட்பட வகுப்பாசிரியர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
5fda7737-4225-451d-9b94-333099d60b97 a0addaff-ba14-44cd-988f-613eb3454d85 afbcbff4-9790-4668-8702-00b0a43265f8 b83a817a-c0aa-4eb4-93a8-b22641ebe050
இந்நிகழ்வு உஸ்ஸாபிடிய சுமங்கல கனிஷ்ட வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவனல்லை மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர். ஹமீட். ஏ. அஸீஸ், பிரதேச முஸ்லிம் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உறையாற்றிய பாடசாலை அதிபர் அவர்கள் இரண்டு சமூகங்களுக்கிடையில் உள்ள சிறந்த உறவின் வெளிப்பாடே இந்நிகழ்வாகும் என குறிப்பிட்டார். மேலும் இங்கிருக்கின்ற மாணவர்கள் இவ்வுறவை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று தான் மிவும் பணிவாக வேண்டிக் கொள்வதாக கூறினார்.
மாவனல்லை முஸ்லிம் மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் உறையாற்றும் போது, நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற வகையில் நாம் ஒன்றினைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் இம்மாணவியின் சித்தி இப்பாடசாலைக்கு மட்டுமல்லாது முழு மாவனல்லைக்கும் பெருமைøயாகும். என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *