மாவனல்லை, ரம்புக்கன, அரநாயக்க குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: ஹெம்மாத்தகமை பாரிய நீர் வழங்கல் திட்டம்

மாவனல்லை, ரம்புக்கன, அரநாயக்க நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக ஹெம்மதகமயில் பிரதேசத்தில் பாரிய நீர்வழங்கல் திட்டம் எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டமானது 2016 ஆம் ஆண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் உட்பட பல அமைச்சர்கள் கலந்து சிற்பிக்கவுள்ளனர்.

இப்பாரிய நீர்வழங்கள் திட்டத்திற்கு 1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares