மாவனல்லை வர்த்தக நிலையத்தில் தீ; அமைச்சர் ஹக்கீம் கண்டனம்

மாவனல்லை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மாவனல்லை நியூஸ் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி கேள்வியடைந்ததுடன் கவலையடைந்த நான், மூதூர் விஜயத்தினை ரத்துச் செய்துவிட்டு மாவனல்லைக்கு விஜயம் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து விடியல் இணையத்தளத்திற்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த சம்பவம் பற்றி மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பண்டாரவுடன் உரையாற்றினேன். அத்துடன் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் வரை யாரை குறித்த இடத்திற்கு அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டேன்.

நேற்றிரவு ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அளுத்கம வியாரா நிலைய தீவைப்பு சம்பவத்தினை கண்டித்து உரையாற்றியதுடன் இது போன்ற செயற்பாடுகளை தொடர அனுமதிக்க முடியாது என்றேன்.

குறித்த உரை 12.30 மணியளவில் நிறைவுசெய்யப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்களுக்கு இந்த கடை மீது தீ வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பங்கள் குறித்து சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் அசமந்த போக்குடன் உள்ளனர்.

அத்துடன் இது போன்ற செயற்பாடுகளை தொடர அனுமதிக்க முடியாது. குறித்த சம்பவங்கள் தொடருமாயின் ஜெனீவா வரை செல்ல வேண்டி நேரிடும்.

எனவே இந்த சம்பவங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் பாரிய விளைவுகளை கொண்டுவரும்” என்றார்.

Hakeem-e1344617321578

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *