மாவனல்லை வியாபாரிகளுக்கான ஒன்று கூடல் நிகழ்வு

மாவனல்லை நகரில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மாவனல்லை மற்றும் மாவனல்லையை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள வியாபாரிகளுக்கான ஒன்று கூடல் நிகழ்வொன்று நாளை (24) பகல் 3.00 மணிக்கு மாவனல்லை பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக பேராதனை பல்கலைகழக பேராசிரியர் ஏ.எம் நவரத்ன பண்டார அவர்கள் பிரதான உரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் கலபட கோரலையே தேரர்கள் சங்கத்தினர் உட்பட அணைத்து மத தலைவர்களின் வருகையுடன் கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகரி, மாவனல்லை பொலிஸ் அதிகாரி, மாவனல்லை பிரதேச செயலாளர் மற்றும் மாவனல்லை பிரதேச சபை தலைவர் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனவே மாவனல்லை மற்றும் மாவனல்லையை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள வியாபாரிகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொள்கின்றனர்.

images (1)

10410848_664780200266929_5502667341478813995_n (1)

CLIPART_OF_15179_SM_2

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares