மாவனல்லை வைத்தியசாலைக்கு ஐந்து மாடி கட்டிடம் – மஹிபால

சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் இருபது இலட்சம் மக்களுக்கு சேவையாற்றுவதற்கென கூடுதலான நிதியை பெற்று கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன தம்மிடம் உறுதியளித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ​தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் 29 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றின் வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது. எம்பிலிபிடிய வைத்தியசாலையை பிரதான பொது வைத்தியசாலையாக மாற்றி அமைத்து அபிவிருத்தி செய்து வருகின்றோம். இவ் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 606 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் எம்பிலிபிடிய, கலவான ஆகிய வைத்தியசாலை அபிவிருத்தி செய்வதற்கும். கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல, கரவனெல்ல ஆகிய வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவ் வைத்தியசாலைகளில் ஐந்து மாடி வார்ட்டு தொகுதிகளும் அமைக்கப்பட்ட வருகின்றன.

எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் சப்ரகமுவ வானொலி சேவை மற்றும் தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பிக்க உள்ளோம். இதற்கான சகல பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மேலும் ​தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *