மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் குடும்ப ஒன்று கூடல்

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் வருடாந்த பழைய மாணவர் குடும்ப ஒன்று கூடல்

இலங்கையின் பிரபல முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் வருடாந்த பழைய மாணவர் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வூ எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை இரவூ கொழும்பு 06 இல் அமைந்துள்ள மறைன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களான வத்தலை, நீர்கொழும்பு, திகாரிய, பானதுரை, களுத்துரை, அலுத்காமம், இரத்னபுரி ஆகிய பிரதேசங்களில் வாழும் ஸாஹிராவில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் தமது குடும்பம் சகிதமாக இந்த நிகழ்விற்கு அழைக்கப்படுகின்றனர்.

மேலும் விசேடமாக சிறப்பம்சமாக ஸாஹிராவூடன் நெருங்கிய தொடர்புடைய மாவனல்லையைச் சேர்ந்த மற்றும் சமூகத்தின் மேம்பாட்டிற்கு ஆர்வத்துடன் சேவையாற்றி வரும் பிரமுகர்கள், தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் இந்நிகழ்வூக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கல்வியை சீர்பெறச் செய்யவூம் சமூகத்தின் மேம்பாட்டிற்குமான பழையமானவர்களதும் நலன்விரும்பிகளினதும் பொறுப்புக்களும் பங்களிப்புக்களும் சம்பந்தமான சிறப்புரையொன்றும் இந்நிகழ்விள் இடம்பெறப்போகின்றது.

கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் வாழும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களை இந்த நிகழ்வில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவானது தயவாய் வேண்டிக் கொள்கின்றது.

நிகழ்ச்சிக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள எந்தவொரு பழைய மாணவர் சங்க அங்கத்தவரையூம் தொடர்புகொள்ளலராம்.

Fazlan 077 8661667

999b19f0c9-1416027056183

999b19f0c9

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares