ஸாஹிரா கல்லூரி – மாவனல்லை, கத்தார் பழைய மாணவர் சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் வியாழன், அக்டோபர் 31,தோஹா கததார் உள்ள “பிரபல உணவகம்” மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஸாஹிரா கல்லூரி –மாவனல்லை, கத்தார் பழைய மாணவர் சங்கம் கத்தார் கிளை ஜனவரி 2013 ல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நிகழ்ச்சியாக இது இருந்தது .
நிகழ்வில் பேசிய கத்தார் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் முகமது லாபிர் அதன் நடவடிக்கைகளை பற்றி பேசும் போது, முதல் ஆண்டு முக்கியமாக பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கம், கத்தார் வாழ பழைய மாணவர் பற்றிய தரவுகளைசேகரிப்பது மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை உறுதியாக இயக்க போதுமான ஒரு அடித்தளத்தை போடுவதை குறிக்கோள ஆகும் என்றார் .
கத்தார் பழைய மாணவர் சங்கம், ஸாஹிரா கல்லூரி – மாவனல்லை பழைய மாணவர் சங்க வரலாற்றில் முதல் வெளிநாட்டு கிளையாக அங்கீகாரம் பெறப்பட்டது பெருமைக்குறிய விடயம் என்றும் குறிப்பிட்டார்.
அவர் ஐக்கியம் மற்றும் கடுமையான உழைப்பு என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கல்லூரியில் உள்கட்டமைப்புமற்றும் பல வேலை திட்டங்கள் செய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார். அவர் கல்லூரியின் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அத்தகைய குறைபாடுகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு கல்லூரியின் பழைய மாணவர்களின் கடமை என வலியுறுத்தினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கத்தார் பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய நோக்கம் மிக துடிப்பான வெளிநாட்டு பழைய மாணவர் கிளையாக உருவாகுவதும், ஸாஹிறா கல்லூரி இலங்கையின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக மாறும் பாதையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை மேற்கொள்வதுமாகும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட சில பழைய மாணவர்கள் தங்கள் திறமைகளை காண்பித்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்வில் ஸாஹிறா விளையாட்டு யூனியன் உருவாக்கப்பட்டது. கத்தார் நாட்டில் நடக்கும் கிரிக்கெட் மற்றும் கால்பந்துபோட்டித்தொடர்களில் பங்கேற்க முயற்சி எடுக்கப்படும்.நிகழ்வு இரவு உணவுடன் முடிவடைந்தது. ஏறத்தாழ 70 இற்கும் அதிகமாக ஸாஹிறா கல்லூரியின் பழைய மாணவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

