மாவனெல்லையில் இருந்து சென்ற முச்சக்கர வண்டி விபத்து; குழந்தை உயிரிழப்பு

கடுகண்ணாவை, இலுக்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டரை வயதுடைய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து நேற்று(13) மாலை இடம்பெற்றுள்ளதுடன், மாவனெல்லை பகுதியிலிருந்து பிலிமதலாவை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

முச்சக்கர வண்டி சாரதி நித்திரை கலக்கத்தில் வாகனம் செலுத்தியமையே விபத்திற்குக் காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பின்புறமாக அமர்ந்திருந்த முச்சக்கர வண்டி சாரதியின் தாயார் கையிலிருந்த குழந்தை வெளியே தூக்கியெறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கசக்கர வண்டியில் பயணித்த சாரதியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோரும் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *