மாவனெல்லை நகரில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது (Audio)

தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி மாவனெல்லை நகரில் பிக்குகள் 8 பேர் சாகும் வரையான சாகும்வரை உண்ணாவிரதத்தை இன்று முற்பகல் ஆரம்பித்திருந்தனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரயே அமித்த தம்ம,மாகல்கந்தே சுதத்த,ரத்னபுரே நந்தாலோக,மெதிரிகிரியே புண்யாஸார,அம்பத்தலாவே சங்கரத்ன, சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுதத்த,திரியாயே சீலரதன,மெதிரிகிரியே சுதத்த ஆகிய தேரர்கள் கலந்துகொண்டிருந்தனர் .

தெவனகல புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரத நிகழ்வில் பெரும் தொகையான பொதுமக்களும் கலந்துகொள்ளவில்லை என்பது குருப்பிடத்தக்கது. இதேவேளை மவனெல்லையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் இடுபட்டிருந்தனர்.

இன்று மாலை மாவனெல்லை பிரதேச செயலாளர் அவர்கள் உண்னாவிரதம் நடைபெறும் இடத்துகு வருகை தந்து இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கதைத்து இன்னும் ஒரு கிழமைக்குள் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்தார். அதனை தொடர்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுதத்த,திரியாயே சீலரதன தேரரின் கருத்து

[audio mp3="http://mawanellanews.com/wp-content/uploads/2013/11/Voice_002.mp3"][/audio]

ஒரு கிழமை பொறுத்திருந்து பார்போம்……..

New Picture (3)

1420330_624406504287279_1129856771_n 1420517_624406434287286_602022975_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *