மாவனெல்ல பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தீயில் கருகி பலி

மாவனெல்ல பொலிஸ் பிரிவில் தொடந்தல பகுதி சில்லறை வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.  வர்த்தக நிலையத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு கருகி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று(05) அதிகாலை 12.55 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

75 வயதுடைய தனபால எனப்வரே உயிரிழந்தவர் என இனங்காணப்பட்டுள்ளது. குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மரணம் தீயால் கருகி இடம்பெற்றதென கண்டறியப்பட்டுள்ளது. மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *