மீண்டும் ஒலிக்கிறது உங்கள் அபிமான வானொலி அலைவரிசை “FM Zahira”

மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தினால் (Old Zahirians’ Media Association) வருடாந்தம் நடாத்தப்படும் “FM Zahira” வானொலி சேவை இவ்வருடமும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றனர்.

இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 12ம், 13ம், 14ம் திகதிகளில் அதாவது வருகின்ற வியாழன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை FM 103.1 என்ற வானொலி அலைவரிசையில் மாவனல்லை மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களில் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று www.mawanellazahira.com/fm என்ற கல்லூரி இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாகவூம் நேயர்களுக்கு “FM Zahira” வானொலி சேவையினை நேரடியாக செவிமடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளது.

“FM Zahira” வானொலி சேவையில் மணித்தியால வினாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் வெற்றியாளர்களுக்கு மிகப் பெறுமதியான பரிசுகளை வழங்கவும், மேலும் இந்த வானொலி ஒலிபரப்பில் “வீதி உலா” என்ற நிகழ்ச்சியில் “FM Zahira” வானொலி சேவையினை எந்த வீட்டில் வானொலியின் சத்தத்தை அதிகரித்து கேட்கின்றர்களோ அவர்களுக்கு அந்த இடத்திலேயே பணப் பரிசினை வழங்கவும் “FM Zahira” குழு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றனர்.

மேலும் “FM Zahira” வானொலி சேவையில் மாவனல்லை வலயத்தில் உள்ள சகோதர பாடசாலைகளினதும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபடவுள்ளமை குறுப்பிடத்தக்கது. இந்த வானொலி சேவையில் பாடசாலை நிகழ்ச்சிகள் மாத்திரமின்றி கல்வி வழிகாட்டல் நிகழ்சிகள், ஆரோக்கிய சந்திப்புகள், சமூக விழிப்பூட்டல் போன்ற பல முக்கிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட இருப்பதால் அனைவரும் கேட்டு பயன்பெறுமாறு “FM Zahira” குழு வேண்டிகொள்கின்றது.

மணித்தியால வினா – 077 94 43 424

சிறுவர் பூங்கா – 077 43 53 711

-OZMA-

download (38)

H-A5

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *