முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணியத் தடை

மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள்  முகம் தெளிவாக  தெரியாத வகையில் தலைக்கவசம்  அணிவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ்  ஊடகப் பேச்சாளர்  அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார்.

முகம் தெரியாதவாறு கறுப்பு உள்ளிட்ட வர்ண கண்ணாடிகளினால் முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிவதால் குற்றச் செயல்களில் இருந்து தப்பித்துச் செல்லும்  சம்பவங்கள்  அண்மைக்காலமாக பெருமளவில்  இடம்பெற்று வருவதாகவும், பல்வேறு விபத்துகளிலும் பொதுமக்கள்   காயமடையும்போது அல்லது உயிரிழப்புகள் நிகழும்  போது முகத்தை மறைக்கும் வர்ணக்கண்ணாடிகளைக் கொண்ட தலைக்கவசம் அணிந்திருப்போர்  இலகுவாக தப்பித்துச் சென்றுவிடும் பல சம்பவங்கள்  இடம்பெற்று வருவதனாலும், இதனைத் தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1981 இல. 21 மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் 158 (2) மற்றும் 237 சரத்துகளுக்கு அமைய இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *