முச்சக்கர வண்டி விபத்தில் 17 வயது மாவனல்லை வாலிபன் வாபத்

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை, கல்லுக்குழி பகுதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிலந்துள்ளதாகவும், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

மாவனல்லையை சேர்ந்த மொஹொமட் நிஸ்ராஸ் என்ற 17 வாலிபனே விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மேலும் இரு சிறுவர்களும், பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர்.

மேற்படி நால்வரும் முச்சக்கரவண்டியில் மாவனல்லையிலிருந்து வெளிமடைக்கு மரண வீடொன்றுக்காக சென்றுவிட்டு மீண்டும் மாவனெல்லைக்கு திரும்பும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்கள் மாவனல்லையில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என இதுவரை தெரியவில்லை.

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *