முழு மாவனல்லை முஸ்லிம்களும் கைகோர்க்க வேண்டிய தருணம்….

கடந்த வியாழக்கிழமை 28ம் திகதி மாவனெல்லை நகர மத்தியில் பிக்குகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற தினம் (28) மாலை மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனி நெதன்கொட அவர்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்களும் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திகு வருகை தந்து பிக்குகளின் கோரிக்கையை இரண்டு கிழமையிட்குல் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்தனர்.images

மேலும் இப் பிரதேசத்தினை அளக்கும் வேளையை உடனடியாக அரம்பிப்பதற்கு கேகாலை நில அளவைத் திணைகளத்திற்கு பணத்தினை ஒரு கிழமையிகுல் தொல்பொருளியல் திணைகளத்தினால் வழங்குவதாகவும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்கள் உறுதியளித்தானர். இதற்கு அமையவே நேற்று(03) பிரதேசத்தினை அளக்கும் வேளையை கேகாலை நில அளவைத் திணைகளம் ஆரம்பித்திருந்தது.

நில அளவைத் திணைகள அதிகாரிகள் மற்றும் தொல்பொருளியல் திணைகள அதிகாரிகள் குன்றை மாத்திரமே அளவையிட்டுள்ளனர். அதன்போது பிக்குகளும் பேரினவாதிகளும் தெவனகலை புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பும் குன்றை சுற்றி அமைத்துள்ள முஸ்லிம் மக்களின் வீடுகளையும் சேர்த்து அளவையிட வேண்டும் என எதிர்க்கத் தொடங்கினார்கள்.

குன்றைச் சுற்றி 6 அடித்தூரத்தில் தொல் பொருல் எல்லை நிர்னயிக்கப்படும் என நேற்று (03) காலையில் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது எனினும் பிற்பகல் 2 மணியள்வில் இனவாதிகள் படை சூழ முஸ்லிம்களின் வசிப்பிடங்களுக்கு வந்த அதிகாரிகள் வீட்டுத்தின்டுகள் படிக்கட்டுகள் அனைத்தும் தொல் பொருல்களே என பொய் விளக்கம் கூறி அவற்றையும் அவர்கள்து எல்லைக்குள் உள்ளடக்க முற்பட்டனர்.

இதனையடுத்து பொது மக்கள் பகுதியிலிருந்து கடும் எதிர்ப்பு கிழ‌ம்பியதுடன்  இதன்போது சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.. பிரதேச செயலாளர் உயர் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். முடிவாக மறு அறிவித்தல் வரை நில அளக்கும் வேலை கைவிடப்பட்டது. பிரதேச செயலாளர் பிரியங்கனி நெதன்கொட அவர்கள் “இது பொது மக்களின் சட்டபூர்வமான வதிவிடங்களாகும் . இது பற்றிய முடிவு எடுக்கும் உரிமை குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களுக்கே உள்ளது” எனக் குறிப்பிட்டார். அதே நேரம் இனவாதிகள் சிங்கள் மக்கள் வசிக்கும் இடங்களில் அளவையிடக்கூடாது எனவும் வாதிட்டுள்ளனர். இப்பிரசினையை சுமுகமான முறையில் திர்த்துக்கொள்ளும்படி  கேட்டுக்கொன்டார்

நில அளவைத் திணைகள அதிகாரிகள் மற்றும் தொல்பொருளியல் திணைகள அதிகாரிகள் நாளை (05) வர இருப்பதாக நமக்கு அறியக்கிடைத்துள்ளது.

இப்பிரசினையை தெவனகல முஸ்லிம்களின் பிரச்சினையாக மாத்திரம் கருதாமல் முழு மாவனல்லை முஸ்லிம்களும் இப் பிரச்சினையில் கைகோர்த்து அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

 

 

You may also like...

2 Responses

 1. Faizal M Mahroof says:

  தெவனகல முஸ்லிம்களை வெளியேற்ற சதி – அம்பலம்

  இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து தொல் பொருல் அதிகாரிகளும் முச்லிம்களை தெவனகலை இலிருந்து
  வெளியேற்ற அடித்தாளம் இடுகின்றனரா எனும் சந்தேகம் மீன்டும் வலுத்து வருகிரது.

  குன்றைச் சுற்றி 6 அடித்தூரத்தில் தொல் பொருல் எல்லை நிர்னயிக்கப்படும் என நேற்றுக் காலையில் மக்களுக்கு
  வாக்குறுதி அளிக்கப்பட்டது எனினும் 2 மணியள்வில் இனவாதிகள் புடை சூழமுஸ்லிம் வசிப்பிடங்களுக்கு வந்த
  அதிகாரிகள் வீட்டுத்தின்டுகள் படிக்கட்டுகள் அனைத்தும் தொல் பொருல்களே என பொய் விளக்கம் கூறி அவற்றையும்
  அவர்கள்து எல்லைக்குள் உள்ளடக்க முற்பட்டனர்.

  இதனையடுத்து பொது மக்கள் பகுதியிலிருந்து கடும் எதிர்ப்பு கிழ‌ம்பியது.
  பிரதேச செயலாளர் உயர் பொலிஸ் அதிகாரிகள் வரவ்ழைக்கப்பட்டனர்.
  முடிவாக மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகள் கைவிடப்பட்டது

  பிரதேச செயலர் “இது பொது மக்களின் சட்டபூர்வமான வதிவிடங்களாகும் . இது பற்றிய முடிவு எடுக்கும் உரிமை குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களுக்கே உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

  அதே நேரம் இனவாதிகள் சிங்கள் மக்கள் வசிக்கும் இடங்களில் அளவையிடக்கூடாது எனவும் வாதிட்டுள்ளனர்.

  பள்ளி வாசல் நிர்வாகம் பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளது.

  முஸ்லிம்களின் சொந்தக் கானிகளில் கால்னடைகலள் உணவுக்காக மரம் வெட்டப்பட்ட போது முஸ்லிம்கள்
  கைது செய்யப்பட்டனர்

  அதே காணிகளில் வீடு வேலி நிர்மானிக்க முற்பட்ட போது பகிரங்கமாக தடுக்கபபட்டனர்.
  காவல் நிலையத்துக்கு வரவழைக்கபபட்டு விசாரிக்கப்பட்டனர்
  இன்று வரை நிர்மான வேலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

  முஸ்லிம்கள் வம்புக்கிளுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

  இந்த எல்லா சந்தர்ப்ப ங்களிலும் முஸ்லிம்கள் புத்தி சாதுரியட்துடன் சட்டத்தை மதித்து பொறுமை
  காத்தனர்.

  எனினும் இனிவரும் காலங்களில் பொது மக்களின் கானிகளுக்குள் அனுமதியில்லாமல்
  எந்த அதிகாரியோ இன்வாதியோ அனுமதிககப்பட மாட்டனர்.

  அவரவருக்குச் சொந்தமான கானியின் 6 அடியல்ல ஒரு அடியேனும் விட்டுக்கொடுக்கப் படமாட்டாது

  வெளியிடங்களில் இருந்து வந்துள்ள இனவாதிகள் விரட்டப்படும் வரை மேலதிக எந்த நடவடிக்கைகளுக்கும்
  இடமளிக்கப்பட / ஒத்துழைக்கப்பட மாட்டாது.

  இந்த தகவல்களை உண்மைகளை உலகறியச் செய்ய ஊடகவியலாளர்களின் அளப்பெரிய பங்களிப்பை இந்த இக்கட்டான் நிலையில் தெவனகல முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.

 2. ඛන් says:

  We are ready

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *