முஸ்லிம்களின் கோரிக்கையை நிராகரித்தது அரசாங்கம்

பௌத்த தீவிரவாதி என சர்வதேச ஊடகங்களால் பிரகடனப்படுத்தப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த அசின் விராதுவை, இலங்கைக்கு வர வேண்டாமென முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமும், அவர் தலைமையிலான அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் அவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை அசின்விராது இலங்கை வந்தடைந்துள்ளார்.

மியன்மாரில் வாழும் முஸ்லிம் எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் இந்த விராது தேரர் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்ச்ததை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு சமயத் தலைவர்கள் நாட்டுக்கு வருவதில் எந்தவித பிரச்சினையுமில்லை.ஆனால் சர்ச்சைக்குரிய அசின் விராது தேரரின் விஜயத்திற்கே முஸ்லிம்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றனர்.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டில் இவர் பின்னணியாக செயற்பட்ட விடயம் முழு உலகுமே அறிந்ததொன்றாகும். இவ்வாறான நிலையிலேயே இவருக்கு விஸா வழங்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் பொறுப்பான உயர் பதவிகளிலுள்ள அதிகாரிகள் வரலாற்று தவறை செய்துள்ளனர்.

எதிர்காலத்தில் மியனமாரைப் போன்று இலங்கையையும் அடித்தளமிடும கூட்டமாக உள்ளது என்ற சந்தேகம் தற்பொழுது இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த விஜயத்தினை ஏனோதான போக்கில் அரசாங்கம் இருந்தமை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

Ashin-Viradu-Colombo-2-3

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *