முஸ்லிம்களின் பொருளாதாரம் அழிக்கப்படுகின்றது – அமைச்சர் ரிஷாட்

மதவாதிகளின் கையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வைத்துக்கொள்ள எடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே முஸ்லிம்கள் இதனைப் பார்க்கிறார்கள் எனவும், சம்பவத்துக்கான மூலத்தை இனம்கண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும் கைத்தொழில் மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் எமது மாவனல்லை நியூஸ் இடம் தெரிவித்தார்.

மாவனல்லையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கடை நேற்றிரவு எரிக்கப்பட்டமை குறித்து வினவிய போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஏற்கனவே, பெஷன் பக்கில் ஆரம்பமாகி கடந்த வாரம் அளுத்கமை வர்த்தகரின் கடை எரிப்பில் முடிவடைந்திருந்தது. அதன் தொடராகவே மாவனல்லையில் இந்தக் கடை எரிப்பை முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் உண்மைத் தன்மைகளை உரியமுறையில் கண்டறிந்து முஸ்லிம்கள் மத்தியிலுள்ள பதற்றம் நீக்கப்படவேண்டும்.

பொலிஸார் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் கூடியளவு அசம்பாவிதங்களைத் தடுத்திருக்கலாம். பாதுகாப்புத் துறையின் அசமந்தப் போக்கே கடந்த கால சம்பவங்களுக்கு பின்னணிக் காரணிகளாக இருந்துள்ளன.

இச்சம்பவமும் விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா என்பதை கண்டுபிடுத்து விரைவில் மக்களுக்கு அது தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

tyuj

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *