தர்கா நகரில் 2 பள்ளிவாசல்களுக்கு தீ வைக்கப்பட்டு, மற்றும் சில பள்ளிவாசல்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் லைவர் என்.எம்.அமீன் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் தமது பாதுகாப்புக் கருதி, வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகhப்பான இடங்களில் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் ஆகிய மீது தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகள் மீது தாக்குதல்கள் மேட்கொள்ளப்படுவதாகவும் அங்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருவளை பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பேருவளை ஜாமியா நளீமியா வளாகத்துக்குள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன .தற்போது பெருவலையிலும் ஊரடங்கு உத்தரவு பிரபிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.