முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்லர் – மாவனல்லை மக்கள் நட்புறவு மன்றம்

முஸ்லிம் மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்லவென்றும் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என சிங்கள மக்களின் உள்ளங்களில் உணர்வூட்டுவது அரசியல்வாதிகள் என்றும் மாவனல்லை மக்கள் நட்புறவு மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான வருடங்கள் நிலவி வந்த சமூக நல்லிணக்கம் அழிவினை நோக்கி இன்று வேகமாகச் சென்று கொண்டிருப்பதாகவும் மத ரீதியான வேகத்தைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மன்றத்தின் தலைவர் வைத்திய நிபுணர் ஆரியசேன கமகேயின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் விபரம் வருமாறு,

மாவனல்லை மற்றும் அரநாயக் பிரதேசங்களில் சிங்கள பௌத்தர்களே அதிகம் வசிக்கின்றனர். என்றாலும் இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம் என சிறுபான்மையினரும் சில பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சிறுபான்மையினருள் அதிகமானோர் முஸ்லிம்களே. இவர்கள் மாவனல்லை நகரம், ஹெம்மாத்தகம, திப்பிட்டிய, கவிலிபிடிய ஆகிய நகரங்களில் பெரும்பான்மையில் வாழ்கின்றனர்.

முன்பு மாவனல்லை சிறிய நகரமாகவே இருந்தது. வலகடவேயிலிருந்து கடுகண்ணாவ கல்வரை 1820 களில் நிர்மானிக்கப்பட்ட கண்டி, கொழும்பு வீதி மாவனல்லை ஊடாகவே நீண்டு செல்கிறது. அன்று இலங்கையின் முதலாவது ஆற்றக்கு கற்பாலம் நிர்மாணிப்பதற்காக பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வந்த பெரும்பான்மையின தொழிலாளர்கள் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு இறந்ததன் பிற்பாடு அந்த நோயைத் தடுக்கும் நோக்கில் பூசை வழிபாடுகளைச் செய்யும் வகையில் இப்பாலத்தின் அருகில் இந்துக் கோயிலொன்றும் அமைக்கப்பட்டது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் தொழிலாளர்கள் பின்னர் தொளொஸ்பாகயே, கொட்டகல போன்ற பிரதேசங்களிலும் தமது வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர். இந்த நிலையில் மாவனல்லை இந்துக் கோயில் மாவனல்லை பாலத்தைப் போன்று பழைமை மிக்கது.

மாவனல்லை பிரதேசத்துக்கு கத்தோலிக்கர்கள் முதற் தடவையாக முல்லேரியா பகுதியிலிருந்தே வந்துள்ளனர். மேஜர் தோமஸ் ஸ்கீனரின் நிர்வாகத்தில் கல்டன் டோஸன் என்ற பொறியியலாளர் நிர்மானித்த கொழும்பு, கண்டி வீதியின் பிரதான சொந்தக்காரராக ஹொரகொல்லையைச் சேர்ந்த பண்டாரநாயக்க மஹமுதலிதுமா விளங்கினார். மாவனல்லை பாலத்தின் அருகே மாட்டு வண்டிகள் நிறுத்தப்படும் வீடுகளிலே வீடு எனும் பெயரில் பிரசித்தி பெற்றிருந்தது.

விக்கிரம ராஜசிங்க மன்னனின் அந்தப்புறத்தில் இருந்த யகடதோலியகவின மகனான இவோஹாமி காலே கெதர என்ற பெயரில் நடாத்தப்பட்ட கோபி கடையில் பணியாற்றியவர் முல்லேரியாவிலிருந்து வந்த ஹென்திரிஸ் அப்புஹாமிக்கு மாட்டு வண்டில் நிறுத்துமிடம் குதிரை மடுவம் மற்றும் கோபிகடையும் இருந்தது. நீர்கொழும்பு ஹால்தடுவனவிலிருநது வந்த அதார அப்பு, இவோஹாமி திருமண பந்தத்தின் மூலம் சூர சரதியல் பிறந்தார். உதுமன்கந்த லாஸரஸ் கத்தோலிக்க ஆலயத்தை முல்லேரியாவிலிருந்து வந்த கலேகெதரவைச் சேர்ந்தவர்களே முன்னின்று நிர்மாணித்தனர்.

மாவனல்லை பிரதேசத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் வரலாறு இப்பகுதியில் குடியேறிய இந்து, கத்தோலிக்க மக்களின் வருகையை விட நீண்ட காலம் பழைமை வாய்ந்தது. போர்த்துக்கேயர்கள் இலங்கையின் கடற் பகுதிகளை ஆக்கிமித்தபோது அந்தப் பகுதியில் வர்த்தக மற்றும் மருத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மலைநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து குடியேறினர்.

இதன் பின் இவர்கள் மலைநாடு மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாசனைத் திரவியங்கள், யானைகள், குதிரைகள், முத்து, மாணிக்கம், ஆயுதங்கள், கருவாடு, புகையிலை, உப்பு போன்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்கள் பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் வீதியோரங்களிலேயே வாழ்ந்து வந்தனர். இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் இவர்கள் தம்பி, (சகோதரன்) என்ற பெயரில் அழைத்தனர்.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மருத்துவம், கட்டிட நிர்மாணம், (மரவேலை, மேசன்) போன்றவற்றில் முஸ்லிம்கள் ஈடுபாடு காட்டினர். அத்தோடு கீழ் நாட்டு போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர் ஆட்சியினர் அயல் நாடுகளுடனான இராஜதந்திர தொடர்புகளுக்காக வேண்டி வெளிநாட்டு மொழிகளை அறிந்து வைத்திருந்த முஸ்லிம்களே பயன்படுத்தப்பட்டனர். இலங்கை முஸ்லிம்களின் முன் பெயர்களுக்கு முன்னால் வைத்தியரத்ன, வெதமுகாந்திரம், வைத்தியசேகர தானாபதிகே என்ற பெயர்கள் குறிக்கப்பட்டதும் முன் சொன்ன செயற்பாடுகளின் காரணமாகத்தான்.

இந்தியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்களான வந்தாலும் இலங்கை வந்த முஸ்லிம்கள் இவ்வாறான செயற்பாடுகளை கொண்டிருக்கவில்லை. கொழும்பு பல்கலைக்கழக வரலாறு தொடர்பாக பேராசிரியர் லேபினா தேவராசா என்பவரின் இலங்கை முஸ்லிம்கள் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி இந்த நாட்டின் முஸ்லிம்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக சிங்கள மக்களுடன் மிக நட்புறவுடன் செயற்பட்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இக்காலப்பகுதியில் சிங்கள மக்களுடன் 1915ல் கம்பளைப் பகுதி மோதல் ஏற்பட்டது. கம்பளைப் பிரதேச பள்ளியொன்றுக்கு முன்னால் மேளம் தட்டிக்கொண்டு பெரஹர ஒன்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தததன் காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது. எமது நாட்டை இன, மத, குலம் என்ற அடிப்படையில் பிரித்து ஆட்சி செய்த ஆங்கிலேயர்ளின் கொள்கை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது எனவும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக, மருத்துவ  விஞ்ஞானம் தொடர்பான விசேட வைத்திய நிபுணரான நான் மாவனல்லை போன்ற பல மதங்கள் ஒன்றிணைந்த சமூகத்துக்குள் வாழ்ந்து கொண்டுழு அவர்களுக்கிடையில் சிறந்த சுகாதார நிலைமையொன்றினை உருவாக்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நோக்கின்படி சுகாதாரம் என்பது நோய்களிலிருந்து தவிர்ந்திருப்பது மாத்திரமன்றி உடல், உள, சமூக, கல்வி ஆகியவற்றில் பரிபூரணம் பெற்றிருப்பதாகும்.

இதனால் சமூக மருத்துவ விஞ்ஞான பரிசில் நோயாளிகளுக்கு சிகிச்சை வஙழ்குவது மாத்திரமன்றி மக்களிடையே சுகாதார பழக்க வழக்கங்களை ஏற்படுத்தல், சுற்றாடலை சுகாதாரத்துக்கேற்றவாறு வடிவமைத்தல், சமூகத்தின் சமாதானம், ஒற்றுமை, மகிழ்ச்சி என்பவற்றையும் ஏற்படுத்துவதாகும்.

நான் மாவனல்லை பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியாகவும்;, என் மனைவி மாவனல்லை ஆஸ்பத்திரிக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறோம். மாவனல்லைப் பிரதேசத்துக்கு நாங்கள் வந்து இப்போது 35 வருடங்களாகிவிட்டன. இக்காலப் பகுதிக்குள் இரண்டு இனவாத கலவரங்களை நான் கண்டு விட்டேன். இதில் முதலாவது 1980ல் ஏற்பட்ட தமிழ், சிங்கள இன மோதலாகும். அப்போது கேகாலை மாவட்டத்தின் மகப்பேற்று, குழந்தை சுகாதாரப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியதுடன், சுகாதார சேவை தாதிமார்களுடன் ஒன்றிணைந்து மாவனல்லை மயுரபாத கல்லூரி மற்றும் கேகாலை சென் மேரிஸ் கல்லூரி ஆகியவற்றில் நடாத்தப்பட்டு வந்த அகதி முகாம்களிலிருந்த தமிழ் மக்களுக்குத் தேவையான சுகாதார மற்றும் ஆலோசனை சேவைகளை நடாத்தினேன்.

மாவனல்லைப் பகுதியில் நான் கண்ட இரண்டாவது இனக்கலவரம் 2001ம் ஆண்டீல் மாவனல்லை மற்றும் அண்டிய பிரதேசங்களில் சிங்கள, முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்ட இனக்கலவரமாகும். அச்சந்தர்ப்பத்தில் முஸ்லிமொருவர் கொல்லப்பட்டதுடன், பெருந்தொகையான கடைகள் எரிக்கப்பட்டன. அக்கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் அப்போது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இராணுவத்தின் உதவியுடன் கலவரம் முடிவுக்கு வந்தது. இச் சம்பவத்தின் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வந்த ஒற்றுமை சீர்குலைந்ததுடன், இரண்டு சமூகங்களிடையேயும் கலாச்சார, பண்பாட்டு ரீதியான இடை வெளியையும் காண முடிந்தது.

சிங்கள, முஸ்லிம் ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஏது செய்யலாம். என்பது பற்றி பேராதனைப் பல்கலைக்கழக சமூக, விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் டியுடர் சில்வாவுடன் கலந்துரையாடி கணிப்பீடொன்றினை மேற்கொண்டேன். இன் பின் ஒவ்வொரு வருடமும் பேராதனை பல்கலைக்கழக, சமூக, விஞ்ஞானப் பிரிவில் பயிலும் மாணவர்களை அழைத்து மாவனல்லைப் பகுதியில் நிலைமையை மதிப்பீடு செய்தேன். இதன்போது கண்டறியப்பட்ட பிரதான விடயம் என்னவென்றால், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நட்புறவு நிலைகுலைந்து செல்வது என்பதாகும். முப்பது வருடகால வடக்கு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் நாட்டில் தோன்றியுள்ள மதவாத அமைதியின்மையினால் இந்த நிலைமை மேலும் உக்கிரமடைந்துள்ளது.

பல்வேறு மதக் குழுக்களால் நாட்டினுள் தோற்றுவிக்கப்பட்டுள்ள மாடு அறுப்பு எதிர்ப்புப் போராட்டம், ஹலால் எதிர்ப்பு என்பவற்றால் மாவனல்லை போன்ற சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழும் பகுதிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களாக இலங்கையர் புலம் பெயர்ந்து சென்றதால் முஸ்லிம்களின் கலாச்சாரமும் அராபியர்களின் நிலைக்கு மாறியது. சாரி அணிந்து முகத்தை மறைத்த முஸ்லிம்கள் பெண்கள், அரேபிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பர்தா, நிகாப், ஆகியவற்றை அணிய ஆரம்பித்தனர். இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கட் போட்டிகள் இடம்பெறுகையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஆதரிக்க ஆரம்பித்தனர். மாவனல்லை முஸ்லிம் மாணவர்கள் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு மாத்திரம் சென்றதால் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சிக்கல் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே சந்தேகம் பகைமை ஆகியன வளர்வதற்கு ஆரம்பித்தது.

2001ம் ஆண்டில் மாவனல்லையில் இடம்பெற்ற சிங்கள, முஸ்லிம் கலவரத்துக்குக் காரணமாய் அமைந்தது அரசியல்வாதிகளின் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த கப்பம் பெறுவோரின் தாக்குதலுக்குள்ளான அப்பாவி முஸ்லிம் ஒருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவமாகும். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அப்போது எவ்வித சிவில் அமைப்புகளும் தோன்றியிருக்கவில்லை. இதனால் புத்திஜீவிகளும் பொறுப்புவாய்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களும் இனக்கலவரம் பரவுகையில் கவலையோடு நோக்குவதை விட வேறெதையும் செய்வதற்கு முடியவில்லை.

மாடு அறுப்புக்கான எதிர்ப்பு, ஹலால் எதிர்ப்பு போன்றவற்றுக்கு மேலதிகமாக கடந்த சில ஆண்டுகளாக மாவனல்லை வரலாற்று முக்கியத்துவமிக்க தெவனகல புனித பூமியை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளதாக சிங்கள ராவய, பரகும் சேனா போன்ற அமைப்புகள் பேஸ்புக், யூ.டியூப் போஸ்டர் மூலம் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால் சிங்கள, முஸ்லிம் இனக்கலவரமொன்று தோன்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாதிருப்பதைத் தடுப்பது பிரதேசத்தில் வாழ்கின்ற புத்திஜீவிகள் மற்றும் பொறுப்பு வாய்ந்த மக்களின் கடமையாகும்.

தற்போது மாவனல்லை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்புக் குழுவினர் ஆலோசகராகப் பணி புரியும் நான் மாவனல்லையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மத ரீதியான இனக் கலவரமொன்றினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக மாவனல்லை பிரதேச முஸ்லிம் பள்ளிவாசல்களின் தலைவர் டாக்டர் ஹமீத் ஏ. அஸீஸ் மாவனல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடி மாவனல்லை மக்கள் நட்புறவு மன்றம் என்ற பெயரில் அமைப்பொன்றினை தோற்றுவித்துள்ளோம்.

-நன்றி Daily Ceylon-

9020_1183607722369_5118525_n

You may also like...

1 Response

  1. Faizal M Mahroof says:

    effort taken to translate this is very much appreciable…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares