முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை பிரதேசத்திற்கே அதிக நிதி ஓதுக்கிடு – அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய

கோகாலை மாவட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுப்புக்களுக்காக இம்முறை பஜட்டில் பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது. 2500 கோடி ருபா ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெருந்தொகையினை முஸ்லிம்கள் வாழும் மாவனல்லைப் பிரதேசத்திற்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மாவனல்லை  ,ஹெம்மாத்துகமை, கம்பளை வீதியை  புனர் நிர்மாணம் செய்வதற்காக 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சகல பாடசாலைகளுக்கும் மாணவர்களுடைய எதிர்கால தொழில் நுட்ப கல்வி நலனைக் கருத்திற் கொண்டு  கணினி தொழில் நுட்ப கற்கை கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று தகவல் தொலைத் தொடர்வு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் முஹமட் அப்துல் கப்பாரின் வேண்டுகோளின் பிரகாரம் மாவனல்லை தெல்கஹகொட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் 40  இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணினி தகவல் தொழில் நுட்ப கற்கை நிலையத்தை திறந்து வைக்கும் வைபவம் பாடசாலை அதிபர் ஏ. எம். சாஹாப்தீன் தலைமையில் 09-01-2014 நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

உலகளாவிய ரீதியில் கணினி கற்கை தொழில் நுட்பத்துறை மிக அத்திவாசியமான தொன்றாக விளங்குகின்றது . எங்கள் நாட்டு மாணவர்கள் நிலத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதை இடமளிக்கச் செய்ய வில்லை. அவர்களை உலக நாடுகளுடன் போட்டி போடுமளவுக்கு தொழில் நுட்பத் துறையில் உயர்ந்த இலக்கை அடையச் செய்வதில் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தி முன்னேடுப்புக்கள் மேற் கொள்ளப்படுகின்றன. இந்த துறையை முன்னேடுத்துச் செல்வதற்காக பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்

இந்நிகழ்வில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன , மாவனல்லை பிரதேச பை உறுப்பினர் அப்துல் கப்பார், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

download (8) download (9)

DSC00102

 DSC00097

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *