முஸ்லிம் இயக்கங்களுக்கு இடையிலான மோதல்களுக்கு கடுமையான நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

முஸ்லிம் அமைப்புகள், இயக்கங்களால் இடையிலான மோதல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தில் பல்வேறு தரப்பினரால் மற்றும் பல இஸ்லாம் மத பிரிவுகளை சேர்ந்தவர்களினால் ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொள்கின்ற சந்தர்ப்பங்களில்  இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் கடந்த தினங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமை அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன கையொப்பமிட்டு, இஸ்லாம் மத மோதல் எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை (18) விடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

2014ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி, குச்சவெளி பிரதேசத்தில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் இரண்டினை சேர்ந்தவர்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றதுடன் அந்த மோதல்கள் கைகலப்பு வரையிலும் வியாபித்தது.

அதேபோல் 2014.03.14 அன்றைய தினம் மாதம்பே பழைய நகரத்தில் இஸ்லாம் மத பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு பிரிவினர்களுக்கு இடையில் குழப்பகரமான நிலைமை தோன்றியது. அதன்போது வீதியில் சென்றுகொண்டிருந்த வானொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறான மோதல்கள் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றன.

ஏதாவது ஒரு பள்ளிவாசல், தேவாலயம் மற்றும் வேறு மத ஸ்தலங்களை நிறுவுவதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் பௌத்த மற்றும் மத விவகாரங்கள் அமைச்சுக்கு மட்டுமே இருக்கின்றது.

அதனை தெரிந்துகொள்ளாமல், வன்முறை மற்றும் மோதல்களில் ஈடுபட்டால் அவ்வாறு வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும்.

வன்முறைகளில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தையின் மூலம் அல்லது மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுகொள்ளுமாறு சகல இஸ்லாமியர்களுக்கும் தெளிவுபடுத்துமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares