முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது வருடாந்த மாநாடு – 2013

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது வருடாந்த மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 29.06.2013 காலை 9.00 மணிக்கு கொழும்பு -03 ரண்முத்து ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இரு அரங்குகளாக நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பொது அமர்வின் பின் வருடாந்த மாநாடு முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமாகும்.

இம்மாநாட்டில் சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோவும், சிறப்பு பேச்சாளராக ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியும் கலந்துகொள்வர். ஊடகத்துறைக்கும் சமூகத்திற்கும் பங்களிப்புச ;செய்த பலர் இம்மாநாட்டில் கௌரவிக்கப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் எம்.ஏ.எம்.நிலாம் தெரிவித்துள்ளார். அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்து அங்கத்தவர்களுக்கும் உத்தியோக பூர்வ அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

www.waasimmedicalfund.org 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares