மைதானம் அமைக்கும் போர்வையில், மாவனல்லையில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க சதி

மாவனல்லை, கொழும்பு  கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பலகோடி ரூபா  பொறுமதியான முஸ்லிம்களின் காணிகளை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 55858148
பொது மைதானம் அமைக்கும் நோக்குடன் குறித்த இடங்களைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முழுமூச்சாக செயற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த மாகாண சபை உறுப்பினர் மாவனல்லை பிரதேச சபைத் தலைவராக இருக்கும்போது குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தார். எனினும், அது சாத்தியப்படவில்லை. 5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட குறித்த இடமானது தற்போது வயல்வெளியாகவே உள்ளது.
இதில் பெரும்பான்மை சமூகத்தினருக்குச் சொந்தமான இடங்கள் இருந்தபோதிலும் பொது மைதானத்திட்டம், கொழும்பு  கண்டி பிரதான வீதியை தழுவியதாக அதுவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ள பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டத்தில், மஹவத்தை என்ற கிராமத்தைத் தழுவியதாக மைதானத்தளம் அமைக்க பிரதேச சபை பிரதித்தலைவராக இருந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் ஆலோசனை வழங்கியிருந்தார். எனினும், அப்பகுதிக்குள் பல சிங்கள மக்களது காணிகள் உள்ளடங்குவதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது மாகாண சபை உறுப்பினராக உள்ள குறித்த மாவனல்லை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாகவும் ஜனவரி மாத இறுதியில் மைதான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, மாவனல்லை நகரில் ஏற்கனவே பொது மைதானம் ஒன்று உள்ளதுடன், மேலும் இரண்டு பிரமாண்டமான மைதானங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
இம்மைதானங்களில் பல குறைப்பாடுகள் நிழவும் நிலையில் அவற்றுக்கு தீர்வு வழங்காது புதிய மைதானம் அமைக்கப்படுவதன் உள்நோக்கம் என்ன எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த மைதானம் மஹவத்தை கிராமத்தைத் தழுவி அமைக்கப்பட்டால் அதன்மூலம் முஸ்லிம்களே அதிகமாகப் பயன்பெறுவார்கள். அதனைத் தடுப்பதற்காகவே கொழும்பு கண்டி பிரதான வீதிக்கு அருகில் மைதானத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் மாவனல்லை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளரும், அரசதொழில்முயற்சிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஷீம், உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
-RS.Mahi-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares