மைத்திரிபால சிரிசேனவின் பொதுக் கூட்டம் நாளை(16) மாவனல்லையில்

ஜனாதிபதித் தேர்தலின் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் பிரசாரப் பொது கூட்டம் நாளை 16 ஆம் திகதி பகல் 2 மணிக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் மாவனல்லையில் நடைபெறவுள்ளது.

இந்த பொது கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாகார், ஜாதிக ஹெல உறுமயவின் அத்துலிய ரத்தின தேரர், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர மற்றும் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த பொது கூட்டம் மாவனல்லை பூட் சிட்டிக்கு (FOOD CITY) அருகமையில் நடைபெறவுள்ளது.

அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டு குழு கேட்டுக்கொள்கிறது.

10868003_517763218365186_3104504057554978023_n-1418618767353 10847842_1501332580091579_7194764355081755753_n-1418618763202

10847842_1501332580091579_7194764355081755753_n

10868003_517763218365186_3104504057554978023_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *