யூ.எல்.எம் பாரூக் மன்றத்தின் 11ஆவது ஆண்டு விழா கொழும்பில்

யூ.எல்.எம் பாரூக் மன்றத்தின் பதினோராவது வருடாந்த மகாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 3 மணிக்கு கொழும்பு 07 இல் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் தேசபந்து கருஜயசூரிய தலைமையில் நடைபெறும் இந்த வைபவத்தில் மாநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக எதிர்க்கட்சித்தலைவர் ஆர். சம்பந்தன் அவர்களும், நகரதிட்டமிடல் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த வைபவத்தின் மூன்று கோரளை, மற்றும் பஹத புலத்கம தெபாலதே அஸ்கிரி பீட பிரதான சங்க நாயக்கர் வன்தய ஸ்ரீவழத்திராமதிபதி ஹால்யாலே ஆரியவங்ச தேரர் தேசிய ஐக்கியத்துக்கும் இன சௌஜன்யத்துக்கும் ஆற்றிய சேவைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிவினால் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக மன்றத்தின் தலைவரும் முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருமான யூ.எல்.எம் பாரூக் தெரிவித்தார்.

12782223_986162401462039_664107719_n 12822019_986162351462044_1576645789_n 12825142_986162414795371_772999050_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *