ரணில் நாளை மாவனல்லையில்

போதுத் தேர்தலின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரசாரப் பொது கூட்டம் நாளை 2 ஆம் திகதி பகல் 3 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாவனல்லையில் நடைபெறவுள்ளது.

இந்த பொது கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தம்பர அமில தேரர், முன்னாள் உயர்கல்வி பெருந்தெருக்கள் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாஷீம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த பொது கூட்டம் பல வருடங்களின் பின்னர் மாவனல்லை பஸ் தரிப்பிடத்தில் நடைபெறவுள்ளமை குறுப்பிடத்தக்கது.

இதன் போது முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சப்ரகமுவ மாகாண உறுப்பினர் தாகிர் ஹாஜியார் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளார்.

அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெற செய்யுமாறு ஏற்பாட்டு குழு கேட்டுக்கொள்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares