ரியாத்வாழ் இலங்கை முஸ்லிம் சமூகம் ஏற்பாடுசெய்யும் மாபெரும் முஸ்லிம் கலாச்சார நிகழ்வு.

ரியாத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகம் இலங்கை தூதுவராலயத்துடன் இணைந்து மாபெரும் கலாச்சார நிகழ்வொன்றை நடாத்தவுள்ளது. 2017 மார்ச் 17ம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வினை ரியாத்திலுள்ள அல்பஹத் கலாச்சார மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

‘இஸ்லாம் – சமாதானத்தின் மார்க்கம் மற்றும் வாழ்வதற்கான வழி’ எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இக்கலாச்சார நிகழ்வில் முஸ்லிம்களின்; கலாச்சாரம், வரலாறு, பங்களிப்பு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலான போட்டிகள், கண்காட்சி, கலைவிழா, ஆவணப்படக் காட்சி என்பவை நடைபெறவுள்ளன. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மருத்துவ முகாம், இரத்தான நிகழ்வு போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ள, இந்நிகழ்வில் இலங்கை வாழ் அனைத்து மக்களும் கலந்துகொள்ளலாம்.

சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் முஹம்மத் அஸ்மி தாஸிமின் வழிநடத்தலில் ரியாத் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதிப்படுத்தக்கூடிய 14ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரியாத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கிடையிலிருக்கும் உறவை வலுப்படுத்தல், சவூதி வாழ் ஏனைய இலங்கை சமூகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்குமிடையிலுள்ள நல்லுறவை மேன்மேலும் பலமடையச்செய்தல், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு கலாச்சாரம் பங்களிப்பு என்பவற்றை அறியச் செய்தல் மற்றும் அவற்றை முன்வைப்பதற்கான பொதுக்களமொன்றை ரியாத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்திக்கொடுத்தல் என்பவை இந்நிகழ்வின் பிரதான இலக்குகளாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளோர் மற்றும் சக சமூகத்து சகோதரர்களை அழைத்து வர விரும்புவோர், நிதி மற்றும் ஏனைய வகையில் பங்களிப்பு செய்யக்கூடியவர்கள்

0546867925,
0546974055,
0549621048,
0559859065,
0557635639
0509305186,
0558859213 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பின்வரும் இணைப்பின் ஊடாக தம்மை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

https://goo.gl/forms/Q80

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *