வக்பு சபைத் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்

சில பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்கள், நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் வக்பு சபைத் தலை­வ­ருக்கு எதி­ராக தொலை­பே­சி­யூ­டாக மிரட்­டல்கள், அச்­சு­றுத்­தல்கள் விடுத்து வரு­வது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு (சி.ஐ.டி.) முறைப்­பாடு செய்­யப்­ப­ட­வுள்­ளது.

அச்­சுறுத்தல் விடுக்­கப்­பட்ட தொலை­பேசி மற்றும் அலை­பேசி இலக்­கங்­களை சி.ஐ.டி. யிடம் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரி­வித்தார்.

வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் அவர்கள் மாவனல்லை மஹவத்தையை பிறப்பிடமாக கொண்டவரும் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;

‘வக்பு சபை பள்­ளி­வா­சல்­களின் வக்பு சொத்­து­களில் நடை­பெறும் ஊழல்கள், நிதி மோச­டிகள் மற்றும் நிர்­வாகப் பிரச்­சி­னைகள் பற்றி விசா­ர­ணை­களை நடத்தி வரு­கி­றது. அத்­தோடு வக்பு சொத்­துகள், ஊழல்கள் தொடர்­பாக நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் முறைப்­பா­டுகள் கிடைத்து வரு­கின்­றன.

இவ்­வா­றான முறைப்­பா­டு­க­ளையே வக்பு சபை உரிய முறையில் விசா­ரித்து வரு­கின்­றது.

இவ்­வாறு ஊழல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வாசல் தலைவர்கள் மற்றும் நிர்­வா­கி­களே எனக்குத் தொலை­பேசி மற்றும் அலை­பேசி மூலம் அச்­சு­றுத்தல் விடுத்து வரு­கின்­றனர். தவ­றான மிகவும் மோச­மான வார்த்தைப் பிர­யோ­கங்­களை மேற்­கொள்­கின்­றனர். இத­னா­லேயே நான் இவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை நாடி­யுள்ளேன்.

தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு தவ­றான முறையில் ஏசு­கி­றார்கள். பத்­தி­ரி­கை­களில் எழு­துவோம் என்­கி­றார்கள். ஊழல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் எடுக்­கும்­போது எம்­மீது அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­கி­றது.

வக்பு சபைத்­த­லைவர் மற்றும் உறுப்­பி­னர்கள் சிறிய ஒரு கொடுப்­ப­னவைப் பெற்றுக் கொண்டு தொண்டு சேவை­யையே செய்­கி­றார்கள். இதை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எத்­த­கைய அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டாலும் வக்பு சொத்­து­களில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிராக வக்பு சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். வக்பு சொத்து அல்லாஹ்வின் சொத்து என்பதை பள்ளிவாசல் நிர்வாகங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares