வாகன தரகர்களாக நடித்து ரூ 18 இலட்சம் கொள்ளை அடித்த இருவர் மாவனெல்லையில் கைது

ஹைபிரேட்’ வாகனம் ஒன்றை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யலாம் என தெரிவித்து கம்பளை பிரதேசத்திலிருந்து மாவனெல்ல ஹெம்மாத்தகமைக்கு அழைத்துச் சென்று அங்கு வர்த்தகரை தாக்கி அவரிடமிருந்த 18 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த இரு நபர்களை மாவனெல்ல பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்.

ஹைபிரைட் வாகனம் ஒன்றினை குறைந்த விலைக்கு பெற்றுத்தருவதாக கூறி வாகன தரகர்கள் போன்று நடித்து கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த தன்னை ஹெம்மாத்தகம பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தம்மைக் கடுமையாகத் தாக்கி தம் வசமிருந்த 18 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஆர். சரத் குமார (வயது 29) என்பவர் மானெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இரு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் வீடொன்றின் கூரைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட் டிருந்த கொள்ளைப் பணம் மூன்று கையடக்கத் தொலைபேசிகள், ஒரு கைப்பை என்பவற்றை கைப்பற்றி இரு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares