வியட்நாம், பங்களாதேஸ் இடத்தை நாம் எட்டிப்பிடிக்க வேண்டும் – கபீர் ஹாசிம்

இலங்­கையின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு இறுதிச் சந்­தர்ப்பம் இன்று இரண்டு பிர­தான கட்­சி­யி­ன­ருக்கும் கிடைத்­துள்­ளது. இதனை நிறை­வேற்­று வோம், நாட்டை கட்­டி­யெ­ழுப்­புவோம் என நேற்று சபையில் தெரி­வித்த அமைச்சர் கபீர் ஹாசிம் தேசப்­பற்­றுக்குள் மறைந்து கொண்டு மத­வா­தத்­தையும் இன­வா­தத்தை யும் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் தூண்டி விட்­ட­னரே தவிர, நாடு முன்­னே­றிச் ­செல்லும் வரவு – செல­வுத்­திட்­டங்­களை முன் ­வைக்­க­வில்லை.1957892_338606839673541_160382511727448317_o

எமது அரசு நாட்டின் எதிர்­கா­லத்தை முதன்­மைப்­ப­டுத்­திய வரவு – செலவு திட்­டத்தை முன்­வைத்­துள்­ளது என் றும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கிழமை இடம்­பெற்ற அர­சாங்­கத்தின் வரவு – செல­வு­த் திட்ட முத­லா­வது விவா­தத்தை அரசு தரப்பில் ஆரம்­பித்து வைத்து உரை­யாற் றும் போதே அமைச்சர் கபீர் ஹாசிம் இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இந்த அரசு அர­சி­யலை முதன்­மைப்­ப­டுத்தி எத­னையும் முன்­னெ­டுக்­க­வில்லை. நாட்­டையும் மக்­க­ளையும்

முதன்­மைப்­ப­டுத்­தியே நாம் தீர்­மா­னங்­களை முன்­னெ­டுப்போம். ஆனால் கடந்த ஆட்­சியில் தேசப்­பற்று என்ற சீமெந்து சுவற்­றுக்குள் மறைந்து கொண்டு நாட்டில் இன­வா­தமும் மத­வா­தமும் தூண்டி விடப்­பட்­டது. அதனை விடுத்து நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் அபி­வி­ருத்­தியை கவ­னத்­தில்­கொள்­ள­வில்லை.

இன்றும் நாட்டின் நூற்­றுக்கு 23 வீத­மான பிள்­ளைகள் போஷாக்­கின்­மையால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அது குறை­ய­வில்லை. அத்­தோடு நாம் மத்­திய தர வரு­மானம் பெறும் நாடு என்று கூறு­வ­தையே விரும்­பு­கின்றோம்.

ஆனால் எமது நாடு இன்றும் வறுமை கோட்­டில்தான் உள்­ளது. எனவே கடந்த ஆட்­சி­யா­ளர்கள் பொய்­யான பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யையும் தர­வு­க­ளையும் வெளிப்­ப­டுத்தி நாட்டின் பொரு­ளா­தாரம் உயர்­வ­டைந்­த­தாக பொய்­யான தக­வல்­களை வெளி­யிட்­டனர்.

ஆனால் எதுவும் இடம்­பெ­ற­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அனைத்து நோய்­க­ளி­னாலும் பீடிக்­கப்­பட்ட நோயா­ளியை போன்­ற­தொரு பொரு­ளா­தா­ரத்­தையே நாம் முன்­வைத்தோம்.
100நாள் ஆட்­சியில் அந்த நோயா­ளிக்கு சேலைன் வழங்கி உயிர் கொடுத்தோம். இன்று நிலை­யான ஆட்­சிக்கு வந்து அந்த நோயா­ளியை முழு­மை­யாக குண­மாக்கும் வரவு செலவு திட்­டத்தை முன்­வைத்­துள்ளோம்.

அதே­வேளை கடந்த ஆட்­சியில் எமது நாட்­டுக்கு எதி­ரான வெளி­நாட்டு அழுத்­தங்கள் அதி­க­ரித்­தி­ருந்­தது. எமது ஆட்­சியில் ஜெனி­வாவில் வெற்றி கொள்­ளப்­பட்டு நாட்டின் இறை­மை­யினை பாது­காத்தோம். நாட்டின் இருப்பை முதன்­மைப்­ப­டுத்தி வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளோம்.

வியட்நாம் பங்களாதேஸ் இன்று உலகின் முன்னேற்றகரமான நாடுகளாக மாறி வருகின்றன. அந்த இடத்தை நாம் எட்டிப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஹபீர் ஹாசிம் தெரிவித்தார்.

-ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்­னீர்­செல்வம்-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *