வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் – மஹிபால ஹேரத்

கேகாலை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கும் விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கூறினார்.

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அவசரமாக வீடுகளை கட்டுவதற்கு தேவையான நிலத்தை அடையாளம் காண்பதற்கு மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

அரநாயக்க பிரதேசத்தில் கேகாலை மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வனசூரிய உள்ளிட்ட மாகாண சபையின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் இதனைக் கூறியுள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் முழுமையாக சேதமடைந்த வீடுகள் 152 ஆக பதிவாகியுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் 1189 ஆக பதிவாகியுள்ளமை குறுப்பிடத்தக்கது.

13237646_1701210786811724_8075774982365313407_n 13240561_1701210730145063_8637682827788134425_n 13254584_1701212200144916_2974308336453658100_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *