வெற்றிகரமாக நடைபெற்ற மாவனல்லை இரத்த தான முகாம்

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மாவனல்லை கிளையுடன் மாவனல்லை முஸ்லிம் மக்கள் வருடாந்தம் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் நேற்று (29) மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த இரத்த தான முகாமில் மொத்தமாக 464 பேர் கலந்து கொண்டனர், இதில் பலர் நேரமின்மை காரணமாக திருப்பி அனுப்பப்பட்டதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். இன்நிகழ்விற்கு மாவனல்லை பிரதேச வாழ் மக்கள் இன மத பேதமின்றி பெரும் ஆர்வம் காட்டியதுடன், பெண்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இரத்த தான முகாமிற்கு மாவனல்லை, கண்டி, கம்பளை, கேகாலை, நாவலப்பிடிய வைத்தியசாலையின்  இரத்த தான வங்கிகள்  கலந்து கொண்டிருந்தது

இந்த இரத்த தான முகாமிற்கு விஷேட அதிதிகளாக சுகதாரா பிரதி அமைச்சர் லலித் டிசானாயாக, சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன, மாவனல்லை பிரதேச சபை தலைவர் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

1493161_713960565290602_57831319_n 1535614_713960548623937_37425822_n

 

933927_10152157359877053_1720321625_n 1477610_10152157364082053_705126053_n 1493131_773730079308057_106896673_n 1505084_10152157355602053_2094741050_n 1509213_10152157378272053_2033588952_n

1511399_10152157361522053_1584591604_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *